விக்னேஷ் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தையும் 10 ஆம் வகுப்பு இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை

Published: 17/05/2024 12:51 PM Updated: 17/05/2024 12:51 PM
Ads
news-banner

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டு பள்ளியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் நடந்த சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சியுடன் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.

12-ஆம் வகுப்பில் கே.எஸ்.ஹரிபிரியா மாவட்ட அளவில் முதலிடத்தையும், பத்தாம் வகுப்பில் எஸ்.வைஷ்ணவி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதியவர்களில் எண்ணிக்கை 126 அதில் தனிநிலை தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 62 முதல் நிலை தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 46. 12-ம் வகுப்பில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 123. அதில் தனிநிலை தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 61. முதல் நிலை தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 59. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று மாணவி எஸ்.வைஷ்ணவி 486. இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர் வி.சர்வேஷ் 478. மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவி எஸ்.கீர்த்தி குணாலினி 465, 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கே.எஸ்.ஹரிபிரியா 483, இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர் கே.கோபதி 469. மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவி பி.ரஜ்ஜியஸ்ரீ -466-ம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் அதற்காக உழைத்திட்ட ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் ஆர் குப்புசாமி, பள்ளியின் நிர்வாகி டி.எஸ்.சவிதா மற்றும் பள்ளியின் முதல்வர் எஸ்.தேன்மொழி ஆகியோர் வாழ்த்துக் கூறி பாராட்டினர்.

YOU MAY ALSO LIKE