திண்டிவனத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

Published: 11/05/2024 13:53 PM Updated: 11/05/2024 13:53 PM
Ads
news-banner

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் நீர் மோர் பந்தல் ஆகியவை தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக நேற்று திண்டிவனம் நேரு வீதியில் தேமுதிக நகர செயலாளர் காதர் பாட்ஷா தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானம், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு உள்ளிட்ட பொருட்கள வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிற் சங்க தலைவர் சஞ்சீவி வெங்கடேசன், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், நகர நிர்வாகிகள்  நடராஜ்,துரை, வெற்றி வேந்தன், முஸ்தபா, கார்த்திக், பாஸ்கர், மாரீஸ்வரன், சேதுகுமார், கான்சா, சாதிக், அய்யனார், அமலா தாஸ், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

YOU MAY ALSO LIKE