திமுக வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து எ.வ.குமரன் வீதி, வீதியாக வாக்குசேகரிப்பு

Published: 20/04/2026 13:45 PM Updated: 20/04/2026 13:45 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாநகரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எ.வ.குமரன் வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மேள, தாளம் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எ.வ.குமரன் வாக்குசேகரித்தார்.

வார்டு எண்.37, மணியாரித் தெரு, முதல்புறாத் தெரு, கோபால் தெரு, தர்க்கா சந்து, வார்டு-36 கல்நகர், வார்டு-35ல் உள்ள மாரியம்மன் கோயில் தெருக்கள், வார்டு எண்.34ல் உள்ள மாரியம்மன் கோயில் தெருக்கள் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எ.வ.குமரன் வாக்கு சேகரித்தார். அப்போது எ.வ.குமரனை பொதுமக்கள் மேள, தாளம் முழங்க சால்வைகள் அணிவித்து வரவேற்றனர். மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், திமுக தேர்தல் அறிக்கையினை விளக்கினார்.

வாக்குசேகரிப்பு நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், துணை மேயர் சு.ராஜாங்கம், பகுதி செயலாளர் குட்டி க.புகழேந்தி, காலேஜ் கு.ரவி, இரா.ஜோதி, எம்.கே.ஏ.ஹக்கிம்சேட், மாமன்ற உறுப்பினர்கள் ஜமிலாபீவி, ஜெயமணிமூர்த்தி, வட்ட செயலாளர்கள் பா.நெளஷாத், பா.முர்பத், கு.தியாகு, மண்டி அ.பழனி, மூ.காமேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

YOU MAY ALSO LIKE