ஆரணியில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் மருத்துவ முகாம் டிஎஸ்.பி பங்கேற்பு

Published: 16/11/2024 15:49 PM Updated: 16/11/2024 15:49 PM
Ads
news-banner
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ரோட்டரி சங்க அரங்கில்
தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து
பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆரணி ஹோஸ்ட் லயன் சங்கம், அரசு
மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரம் ஆகியோர் சார்பில் பொது
மருத்துவ முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் மோசஸ் அனைவரையும்
வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் முன்னிலை வகித்தார். ஆரணி
அரசு மருத்துவ அதிகாரி நந்தினி தலைமை வகித்தார் 
சிறப்பு அழைப்பாளராக துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்
கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் இம்மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், சக்கரை, பல் சிகிச்சை,
கண் மருத்துவம், எலும்பு மருத்துவ சிகிச்சை, சுவாசப் பிரச்சனை மற்றும்
மகப்பேறு உள்ளிட்ட தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் நோயின் தன்மை கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளும்
வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனைத்து
பத்திரிகையாளர் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் மு.தலைவர் நடராஜன்
ஆரணி ரோட்டரி சங்கம் சுலைமான் பொன்னையன் எஸ்.டி.செல்வம்
லயன்ஸ் சில்க் சிட்டி குமரன் சுரேஷ் பாபு உதயசூரியன் முருகானந்தம்,
வணிகர் சங்க பேரமைப்பு ராஜன்,ஆரணி அனைத்து வியாபாரிகள்
சங்கத்தினர் பக்ரூதின், சிறு குறு வியாபாரிகள் சங்கம் அருண்குமார், கட்சி
சார்பற்ற விவசாய சங்கத்தினர் வாக்கடை புருஷோத் மூர்த்தி பெருமாள்

குணாநிதி,சமூக பாதுகாப்பு சங்கம் ராஜன்,அரசு மருத்துவர்கள் சுகாதார
அலுவலர்கள் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.

YOU MAY ALSO LIKE