அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கும் விழா

Published: 18/05/2024 15:09 PM Updated: 18/05/2024 15:09 PM
Ads
news-banner

அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆளுநரின் அதிகாரப்பூர்வ அலுவல் வருகை மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி ஆளுநரின் அதிகாரப்பூர்வ அலுவல் வருகை மற்றும் பல துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா அரக்கோணத்தில் உள்ள பார்ட்டி ஹாலில்  நடைபெற்றது.

 

விழாவுக்கு அரக்கோணம் ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் மனோகர் பிரபு, ரோட்டரி சங்க போலியோ பிளஸ் சேர்மனும், முன்னாள் தலைவருமான வெங்கடரமணன்,  கிளப் அட்மின் வெங்கடேஷ், தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் கவிஞர் மோகன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க பொருளாளர் லட்சுமிபதி வரவேற்றார்.

 

சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி ஆளுநர் பரணிதரன் பங்கேற்று பல துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு விருது வழங்கி பேசியதாவது:

 

அரக்கோணம் ரோட்டரி சங்கம் மாவட்டத்தில் முன்னோடி சங்கமாக விளங்கி வருகிறது. எந்த சேவையாக இருந்தாலும் முதலில் எடுத்து செய்கின்றனர்.  ரோட்டரி சங்க நிகழ்ச்சிகளிலும் குடும்பத்துடன் பங்கேற்பது மனநிறைவை தருகிறது என்றார். 

 விழாவில் தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார், ஆசிரியர்கள்,  நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பல சமூக சேவகர்கள் என மொத்தம் 68 பேருக்கு விருது வழங்கி ரோட்டரி ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.

 

ரோட்டரி முன்னாள் தலைவர்கள் மணி,  சந்துரு, பிரபாகரன்,  இளங்கோ,  ரவிக்குமார், குணசீலன், பிரபாகரன், சிவக்குமார், வெங்கடேசன்,  மகேஷ் குமார்,  ரோட்டரி நிர்வாகிகள் மான்மல், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி சங்கத்துக்கு அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 2.76 லட்சம் நன்கொடையாக ரோட்டரி சங்கத் தலைவர் மணிகண்டன்,  ரோட்டரி சங்கம் போலியோ பிளஸ் சேர்மன் வெங்கடரமணன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். ஏற்பாடுகளை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

YOU MAY ALSO LIKE