புதுப்பாளையம் ஒன்றியத்தில் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது சி.சுந்தரபாண்டியன் ஊராட்சிகளில் சென்று ஆய்வு

Published: 01/05/2024 11:12 AM Updated: 01/05/2024 11:12 AM
Ads
news-banner

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் 13 ஊராட்சிகளில் சென்று ஆய்வு செய்தார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் 13 ஊராட்சிகளில் சென்று ஆய்வு செய்து பேசியதாவது, புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள குலால்பாடி, வடமாத்தூர், மேல்நாச்சிபட்டு, ஜப்திகாரியந்தல், சி.கங்கம்பட்டு, வரவந்தவாடி, பனைஓலைப்பாடி, அள்ளியந்தல், வாசுதேவன்பட்டு, மேலபுஞ்சை, நரசிங்கநல்லூர், தொரப்பாடி, பெரியேரி, ஆகிய ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்று ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய குழு தலைவரும் வட்டார வளர்ச்சி அலுவலரும் சென்று ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதற்காக தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து மேலும் குடிநீர் வசதிக்கு என்னென்ன சலுகைகள் வேண்டும் என்றும் அதை விரைவில் அமைத்துக் கொடுப்பதாகவும் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், இவ்வாறு கூறி மேலபுஞ்சை ஊராட்சியில் நடைபெற்று வரும் மேல்நீர் தேக்க தொட்டி பணியை ஆய்வு செய்தார்.

 

அப்பொழுது பணிகளை விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி மக்களுக்கு செல்லும் குடிநீர் பழுப்பு லைன் அமைப்பதையும் ஆய்வு செய்த அவர், அனைத்து ஊராட்சிகளும் குடிநீர் வசதி அமைத்துக் கொடுத்து விரைந்து முடித்து மக்களுக்கு குடிநீர் வசதி அமைத்துக் கொடுங்கள் என்று ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் இவ்வாறு கூறினார்.

 

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், மற்றும் இன்ஜினியர் தனவந்தர், மற்றும் அரசு அலுவலர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்து மக்களுக்கு தாகம் தணிப்பதற்கு உண்டான பணியை தீவிரமாக செய்து வருகின்றனர்.

 

YOU MAY ALSO LIKE