வந்தவாசியில், அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்

Published: 08/10/2024 12:59 PM Updated: 08/10/2024 12:59 PM
Ads
news-banner
 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், வடக்கு ஒன்றிய அதிமுக  செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர்  தூசி கே மோகன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன் முன்னிலை வகித்தார்.

 

 இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் என் சுப்பிரமணியன், மாநில மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜய குமார்,கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் சிறப்புரையாற்றினர்.   


 இந்த கூட்டத்தில்,கழக உறுப்பினர் களுக்கு அடையாள அட்டை வழங் குவது குறித்தும்,கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் வடக்கு ஒன்றிய பகுதியில் ஆற்றவேண்டிய மக்கள் நலப்பணிகள் குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில்மாநில எம்ஜிஆர் பேரவை துணைச்செயலாளர் ஜாகீர் உசேன் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார்,வந்தவாசி நகர செயலாளர் ஓட்டல் பாஷா, கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.கே.. லோகேஷ்வரன்,வழூர் சக்ரபாணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ராஜேஷ்குமார், துணைச் செயலாளர் பந்தல் சேகர், எம்.ஜி.ஆர் மன்ற ராஜசேகரன், ஹைடெக் பாபு, செந்தில்குமார், ஜஸ்டின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

YOU MAY ALSO LIKE