உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் ஆனதையொட்டி திமுகவினர் கொண்டாட்டம்

Published: 29/09/2024 13:54 PM Updated: 29/09/2024 13:54 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில், இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான


உதயநிதி ஸ்டாலின் துணை அமைச்சராக பொறுப்பேற்றதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் .தயாளன் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவர் .நவாப் ஜான் முன்னிலை வகித்தார்.


வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு, வியாபாரிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் பொறுப்பேற்றதை வரவேற்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில், நகர மன்ற துணைத் தலைவர் அன்னை .சீனிவாசன், உறுப்பினர்  மருது,சையது அப்துல் கரீம், பெரணமல்லூர் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை, ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர்கள் வந்தவாசி கிழக்கு கே.ஆர்.பி பழனி, தெள்ளாறு சுந்தரேசன், பொருளாளர் .ஆர்.ராஜாபாஷா, மாவட்ட பிரதிநிதி சி.பி.பாபு, இளைஞர் அணி கோமாதா சுரேஷ், அப்துல் ஜப்பார், வர்த்தகர் அணி பிடிஜி ஆறுமுகம், விவசாய அணி மருதாடு சந்திரன்,ரமேஷ் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

YOU MAY ALSO LIKE