காட்பாடியில் தடுப்பணைகள் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்பட்டு வருகிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Published: 22/09/2024 14:40 PM Updated: 22/09/2024 14:43 PM
Ads
news-banner

தடுப்பணைகள் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்பட்டு வருகிறதுஅணையை சேதப்படுத்தும்  நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குகைநல்லூர் ஊராட்சியில் நீர்வளத் துறை சார்பில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக ரூபாய் 12 கோடி 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை திறப்பு விழா வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில்கண்காணிப்பு பொறியாளர் ஆர்.ரமேஷ்வரவேற்புரையில் நடந்த விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில் குமார்மேல் பாலாறு வழிநிலை வட்டம் செயற்பொறியாளர் பிரபாகர்உதவி செயற்பொறியாளர் கோபி காட்பாடி ஜெகதீஸ்வரன்காட்பாடி ஒன்றிய குழு பெருந்தலைவர் வேல்முருகன்ஒன்றிய குழு துணைத் தலைவர் எஸ்.சரவணன்காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊசரவணன்பகுதி ஒன்றிய கழக செயலாளர் தணிகாசலம்கருணாகரன்இரவிமாநகராட்சி 1.வது மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜாமாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்       சுலோக்சனா கிருபாகரன்ஒன்றிய குழு உறுப்பினர் டில்லி ராணிபரஞ்சோதிபுகையநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கோதண்டம்சேர்க்காடு ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன்அரசு அலுவலர்கள்ஊராட்சி மன்ற தலைவர்கள்உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சியில் பேசுகையில்,

தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் அதிகமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது என்றும்மக்களுக்கான திட்டங்களை அரசு உருவாக்கி வழங்குகிறது என்றும் அதனை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாயனூரில் முதன்முதலாக அணை கட்டப்பட்டதுஅதன் பிறகு தொடர்ந்து அப்பகுதியில் வேளாண் பயிர்கள் செழித்து வருகிறது.

அதைப்போலவே தற்பொழுது பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையானதுஅதன் பலன் தண்ணீர் தேங்கி நிற்கும் போது தான் மக்களுக்கு தெரியும்.

இந்த அணையானது 750 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது மழை வெள்ளம் வரும்போதுஐந்து அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும்இதனால் சுமார் 716 ஏக்கர் தினங்கள் பாசன வசதி பெறும்.

தற்பொழுது கட்டப்பட்டுள்ள  தடுப்பணையில் தேக்கி வைத்த தண்ணீரை சில காளிப் பயல்கள் நேற்று இரவு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர் .

தடுப்பனையில் தண்ணியை தேக்கி வைக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்ஆனால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

YOU MAY ALSO LIKE