விழுப்புரத்தில் கோடை வெயில் காலத்தையொட்டி
தனியார் பள்ளி சார்பில் டி.ஆர்.பி இணை இயக்குநர் முனுசாமி நீர் மோர் பந்தலினை
திறந்து வைத்தார்.
விழுப்புரம் ரங்கநாதன் ரோட்டில் வி.ஆர்.பி என்ற தனியார்
பள்ளி இயங்கி வருகிறது. அந்த தனியார் பள்ளியில் கோடை வெய்யிலின் தாகத்தை தீர்க்க
பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் நேற்று நீர்,
மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் டி.ஆர்.பி.இணை
இயக்குனர் முனுசாமி கலந்து கொண்டு நீர், மோர் பந்தலினை திறந்து வைத்து
பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில்
வி.ஆர்.பி பள்ளி தாளாளர் சோழன், வழக்கறிஞர் மனோ முன்னாள் நகர மன்ற உறுப்பினர்
அன்பு, தலைமை ஆசிரியர் கந்தசாமி, ஆசிரியர்கள் தயாநிதி
விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.