அதியமான்கோட்டை :தர்மபுரி மாவட்டம்,
அதியமான்கோட்டையிலுள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்ப்பிறை
அஷ்டமியையொட்டி, சுவாமிக்கு, 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு
அபிஷேக, ஆராதனை, வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 1,008 ஆகம பூஜை, வேத பாராயணம்
மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது.
பின், சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்
பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் வெண்பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன்
செலுத்தினர். தொடர்ந்து, இரவு கோவில் வளாகத்தில், 108 கிலோ மிளகு, 1,008 கிலோ
மிளகாய்வற்றலை கொண்டு, சத்ரு சம்ஹார யாகம் நடந்தது