திருவண்ணாமலையில் சிறுமியிடம்
பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 1,000
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 01.11.2015-ஆம் தேதி திருவண்ணாமலை
மாவட்டம் & வட்டம், வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது54) த/பெ சந்திரசேகரன்
என்பவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அப்போதைய திருவண்ணாமலை
அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லதா வழக்குபதிவு செய்து ஐயப்பனை கைது செய்து
சிறையில் அடைத்தார். அந்த வழக்கு சம்பந்தமான விசாரனை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில்
நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி குற்றவாளி ஐயப்பனுகு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
மற்றும் ரூ 1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதன் பேரில் ஐயப்பன் வேலூர்
மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.